சென்னை: பிரபல பின்னணி பாடகி சுசித்ரா மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர் பிரதீப் வெளியேற்றப்பட்டதை அடுத்து காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. பிரதீப்புக்கு ஆதரவாகவும் மற்றொரு போட்டியாளரான மாயா மற்றும் கமல்ஹாசனுக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் பாடகியுமான சுசித்ரா, மாயாவைத் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் மாயா பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். மாயா, தன்பாலின ஈர்ப்பாளர் என்றும் இந்த விஷயம் பிரதீப்புக்குத் தெரியும் என்றும் கூறியிருந்தார். இது சர்ச்சையானது.
மாயா பற்றிய சுசித்ராவின் இந்தக் கருத்துக்கு எதிராக மாயாவின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகப் பாடகி ஸ்வாகா தெரிவித்திருந்தார். இந்நிலையில் சுசித்ராவும் திருநங்கை வைஷூவும் சமீபத்தில் யூடியூப் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நடிகர் கமல்ஹாசனை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து அவர் பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பிரபலமான நடிகரும் அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான கமல்ஹாசனைப் போகிற போக்கில் சுசித்ரா இப்படி அவதூறாகப் பேசுவது கண்டனத்துக்குரியது என்றுகூறி வருகின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்திலிருந்து பிரபலங்களின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையானது. அதை, தான் வெளியிடவில்லை என அவர் மறுத்திருந்தார். இப்போது மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்
முக்கிய செய்திகள்
சினிமா
24 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago