சென்னை: ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தைப் பார்த்து படக்குழுவினரை நேரில் பாராட்டிய ரஜினிகாந்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தலைவா. நீங்கள் எங்களுடன் நடத்திய ஒரு மணி நேர உரையாடல் எனக்கும் எங்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும் ஒரு பாசிட்டிவ் மனநிலையை வழங்கியுள்ளது. எங்கள் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ குழுவினரிடமிருந்து உங்களுக்கு நிறைய அன்புகள் தலைவா” என்று கூறியுள்ளார்.
முன்னதாக ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பார்த்த ரஜினிகாந்த் படத்தை பெரிதும் பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ““ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்பராஜின் அற்புதமான படைப்பு , வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். ‘லாரன்ஸால’ இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். கார்த்திக் சுப்பராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார், பிரமிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழவும் வைக்கிறார். i am proud of you கார்த்திக் சுப்பராஜ்” என்று கூறியிருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
32 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago