மேஜர் சந்திரகாந்த்: சுந்தர்ராஜனை மேஜர் ஆக்கிய திரைப்படம் 

By செய்திப்பிரிவு

நாகேஷ் நடித்த ‘நீர்க்குமிழி’ மூலம் இயக்குநராக அறி முகமான கே.பாலசந்தர், அடுத்து ‘நாணல்’ என்ற படத்தை இயக்கினார். அவர் மூன்றாவதாக இயக் கிய படம், ‘மேஜர் சந்திரகாந்த்’.

ஜெயலலிதா, முத்துராமன், ஏவி. எம்.ராஜன், நாகேஷ், சுந்தர்ராஜன் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை ஏவி.எம் நிறுவனம் தயாரித்தது. கே.பாலசந்தரின் ‘மேஜர் சந்திர காந்த்’ என்ற நாடகத்தைத் தழுவி உருவான படம் இது. நாடகத்தில் மேஜராக நடித்த சுந்தர்ராஜன், திரைப்படத்திலும் அதே கதா பாத்திரத்தில் நடித்தார். படம் வெற்றி பெற்றதாலும் அவர் நடிப்பு பாராட்டப் பட்டதாலும் அவர் பெயரின் முன் னால் ‘மேஜர்’என்ற அடைமொழி தானாக வந்து ஒட்டிக் கொண்டது. இந்தப் படத்தில் நடித்தபோது கே.பாலசந்தருக்கும் ஜெயலலி தாவுக்கும் பிரச்சினை என்கிறார் கள். அவர் கேரக்டர் தற்கொலை செய்துகொள்வது போன்ற காட்சியை அவர் ஏற்கவில்லை என்கிறார்கள். இதனால், பால சந்தர் அவரைதனது அடுத்தடுத்தப் படங்களில் பயன்படுத்தவில்லை.

கே.பி. இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் இதுதான். தையல்காரரான நாகேஷின் தங்கை ஜெயலலிதா. அவர், தங்கை மீது உயிரையே வைத்திருக்கிறார். கஷ்டப்பட்டு கல்லூரியில் அவரைப் படிக்கவைக்கிறார். ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி, பார்வை இழந்து வீட்டில் இருக்கிறார் மேஜர் சந்திரகாந்தான சுந்தர்ராஜன். இவ ருக்கு முத்துராமன், ஏவி.எம்.ராஜன் என்று 2 மகன்கள். ஏவி.எம்.ராஜன், காதலித்து ஏமாற்றியதால் ஜெயலலிதா தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ராஜனை கொல்கிறார் நாகேஷ். போலீஸான முத்துராமன், கொலை யாளி நாகேஷை தேடுகிறார். அவர், ஒரு கட்டத்தில் சுந்தர்ராஜன் பாதுகாப்பில் இருக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

வி.குமார் இசை அமைத்திருந் தார். நான்கு பாடல்களை வாலி யும் ஒரு பாடலை சுரதாவும் எழுதி யிருந்தனர். பி.சுசீலா குரலில் ஜெய லலிதா பாட, நாகேஷ் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இசை அமைப்பது போன்ற, ‘ஒரு நாள் யாரோ’பாடல் சுகமான மெலடி யாக ஹிட்டானது. ‘கல்யாண சாப் பாடு போடவா?’, ‘நேற்று நீ சின்ன பப்பா’ பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. கே.பாலசந்தர், மேஜர் சந்திர காந்தை நாடகமாக நடத்திக் கொண் டிருந்தபோது சினிமாவுக்கான கதை உரிமையை ‘நித்யகல்யாணி பிலிம்ஸ்’எனும் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். பி.மாதவன் இயக்கத் தில் அந்நிறுவனம் படத்தைத் தொடங்கியது.

‘மேஜர் சந்திர காந்த்’ பாத்திரத்தில் சிவாஜி கணே சன் நடித்தார். ஆனால் தொடங்கிய வேகத்திலேயே படம் நின்று விட்டது. பிறகு இந்தியில் இதே நாடகத்தை ‘ஊஞ்சே லோக்’ என்ற பெயரில் எடுத்தார்கள். மேஜர் சந்திரகாந்தாக அசோக்குமார் நடித் தார். நாயகியாக நடித்தது கே.ஆர். விஜயா. அங்கு ஹிட்டான இந்தப் படத்தின் உரிமையை வாங்கித்தான் தமிழில் ரீமேக் செய்தார்கள். படம் தீபாவளி நாளில் வெளி யாகி வெற்றி பெற்றாலும் கொலை காரன் முன் மேஜர் பாடல் பாடுவது உட்பட சில காட்சிகளில் நாடகத் தனம் அப்படியே இருக்கிறது என்ற விமர்சனங்களும் எழுந்தன. 1966ம் ஆண்டு இதே தேதியில் வெளியாகி இருந்தது மேஜர் சந்திரகாந்த்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்