ஆஸ்தான ஒளிப்பதிவாளரை மாற்றுகிறாரா ராஜமவுலி?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: இயக்குநர் ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிப்பில் இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதையடுத்து ராஜமவுலி, மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். அனுமனின் குணாதிசயங்களைக் கொண்ட கதாபாத்திரம் ஒன்றில் மகேஷ்பாபு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

உலக அளவிலான ஆக்‌ஷன் அட்வென்சர் படமாக இது இருக்கும் என்று ராஜமவுலி தெரிவித்திருந்தார். ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, ஆஸ்கர் நிகழ்வில் அளித்த பேட்டியில், காடுகளில் நடக்கும் ஆக்‌ஷன் அட்வென்சர் கதையாக இந்தப் படம் இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் தனது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமாரை மாற்றிவிட்டதாகவும் விஎப்எக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராஜமவுலியும் கே.கே.செந்தில்குமாரும் இணைந்து, சை, சத்ரபதி, மகதீரா, நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்