‘இந்தியன்’ முதல் ‘விக்ரம்’ வரை - வசூலில் ‘மாஸ்’ காட்டிய கமல்ஹாசன் படங்கள்

By கலிலுல்லா

கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம், அவருக்கு வணிக ரீதியாக பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. மேலும் அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதற்கான மற்றும் நடிப்பதற்கான உத்வேகத்தையும் சேர்த்தே கொடுத்தது. காரணம், கடந்த 2018-ம் ஆண்டு கமல் தயாரித்து, நடித்து இயக்கிய ’விஸ்வரூபம் 2’ திரைப்படம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.50 கோடியை மட்டுமே வசூலித்தது. இதனால், 4 ஆண்டுகளாக நடிப்புக்கு தற்காலிக ஓய்வு கொடுத்திருந்தவர் தற்போது ‘நாயகன் மீண்டும் வர்றான்’ பாணியில் மீண்டும் களமிறங்கியிருக்கிறார். அந்த வகையில், இன்று (நவ.7) பிறந்தநாள் கமல்ஹாசனின் பாக்ஸ் ஆஃபீஸ் ரெக்கார்டுகளை பார்ப்போம்.

இந்தியன் (1996): இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தில் அப்பா- மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் கமல் நடித்திருந்தார். சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் லஞ்சம், ஊழல் குறித்து கேள்வி எழுப்பம் இப்படம் ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக ரூ.60 கோடி வசூலை ஈட்டியது. அப்போது, தமிழ் சினிமாவின் அதிகபட்ச வசூல் சாதனையை இப்படம் நிகழ்த்தியிருந்தது.

வேட்டையாடு விளையாடு (2006): சரியாக 10 வருடங்கள் கழித்து 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது ‘வேட்டையாடு விளையாடு’. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்த இப்படத்தில் காவல் துறை அதிகாரியாக கமல் நடித்திருந்தார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.15 - 20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.50 கோடி வசூலை குவித்தது. அண்மையில் கூட இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது ரூ.1 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்திருந்தது.

தசாவதாரம் (2008): 10 வெவ்வேறு கெட்டப்பில் கமல் அவதாரம் எடுத்திருந்த படம் ‘தசாவதாரம்’. கமல் கதை எழுத கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். ஹிமேஷ் ரஷ்யாமியா இசையமைத்திருந்த இப்படத்தில் அசின் நாயகியாக நடித்திருந்தார். அப்போது கமலின் வெவ்வேறு வேடங்களால் கவனம் பெற்ற இப்படம் தொழில்நுட்ப ரீதியான ரீதியான மேக்கிங்கிற்காக பாராட்டப்பட்டது. ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.107 கோடியை வசூலித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

உன்னைப்போல் ஒருவன் (2009): சக்ரி டோலேட்டி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியானது ‘உன்னைப்போல் ஒருவன்’. மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு ஸ்ரூதி ஹாசன் இசையமைத்திருந்தார். ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.40 கோடி வசூலை நெருங்கியது.

விஸ்வரூபம் (2013): பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவித்த படம் ‘விஸ்வரூபம்’. கமல்ஹாசனே தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். சங்கர்-எஹ்சான்-லாய் குழுவினர் படத்துக்கு இசையமைத்திருந்தனர். ரூ.70 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ.110 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது ஹிட்டடித்தது. அதன் இரண்டாம் பாகம் பெரிய அளவில் கமலுக்கு கைகொடுக்கவில்லை.

பாபநாசம் (2015): ‘த்ரிஷ்யம்’ மலையாள படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான இப்படத்தை ஜீத்து ஜோசஃப் இயக்கியிருந்தார். கமல்ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். க்ரைம் - த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் எதிரொலியாக ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை எட்டியதாக தகவல் வெளியானது.

உத்தமவில்லன் (2015): கமல்ஹாசன் கதை எழுதி நடித்த இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இப்படத்தில் ஊர்வசி, கே.பாலசந்தர், ஜெயராம், ஆன்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இப்படம் பல்வேறு விருதுகளை பெற்றது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் மொத்தமாக ரூ.50 கோடி வசூலித்தது.

விக்ரம்: ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்த கமலின் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக குவிந்தனர். ஃபஹத் பாசில், சூர்யா, விஜய்சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். உலக அளவில் ரூ.430 கோடி வசூலை ஈட்டிய இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.180 கோடி வசூலித்து தமிழில் அதிகபட்ச வசூலை குவித்த படமாக உருவெடுத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்