“நடிக்கும் ஆர்வம் இப்போது இல்லை” - வெற்றிமாறன் வெளிப்படை

By செய்திப்பிரிவு

சென்னை: தனக்கு இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அமீர் நடித்துள்ள திரைப்படம் ‘மாயவலை’. ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உட்பட பலர் நடித்துள்ளனர். ரமேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை அமீரின் ஃபிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் வெளியிடுகிறார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

இதில், கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது: “நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி. இரண்டையும் ஒரு சிலரால்தான் சமாளிக்க முடியும். அது என்னிடம் இல்லை அதனால் இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை. 'வட சென்னை' ராஜன் கதாபாத்திரம் பலர் நடிப்பதாக இருந்து தள்ளிப்போனது. கடைசியாக அமீரைப் போய்ச் சந்தித்தேன், கேரக்டர் குறித்து நான் சொல்லாமலே எனக்காக நடிக்கிறேன் என்றார். ஆனால் அதைப் பற்றி சொன்ன பிறகு இந்தக் கேரக்டருக்கு சரியாக இருக்கமாட்டேனோ என்று நினைத்தார். ஆனாலும் எனக்காக நடிக்க வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை எங்கள் நட்பு தொடர்கிறது” இவ்வாறு வெற்றிமாறன் பேசினார்.

முன்னதாக இதே விழாவில் பேசிய இயக்குநர் அமீர், “வெற்றிமாறனை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசை” என்று கூறியிருந்தார். அதேபோல அண்மையில் ‘லியோ’ படத்தின் வெற்றிவிழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க வெற்றிமாறனை பலமுறை தொடர்பு கொண்டு அவர் மறுத்துவிட்டதாக கூறியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

27 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்