சென்னை: இயக்குநர் அமீர் நடித்துள்ள திரைப்படம் ‘மாயவலை’. ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உட்பட பலர் நடித்துள்ளனர். ரமேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை அமீரின் ஃபிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் வெளியிடுகிறார்.
இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில், இயக்குநர் அமீர் பேசியதாவது:
வெற்றிமாறனை நடிக்க வைக்கும் ஆசை எனக்கு இருக்கிறது. கதாநாயகனாக, கதையின் நாயகனாக அவரை நடிக்க வைக்க இருக்கிறேன். அவரிடம் அவ்வளவு விஷயம் இருக்கிறது. ‘வட சென்னை’யில் வெற்றிமாறன் என்னை நடிக்க வைத்தார். அந்த ராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க என் மீது அவர் நம்பிக்கை வைத்தார். படப்பிடிப்பின் முதல் மூன்று நாட்கள் எனக்கு ஒரு மாதிரியாக இருந்து. அந்த கேரக்டர் சரியாக இருக்கிறதா? என்று அப்போதும் வெற்றி மாறனிடம் கேட்டேன். அவர் ‘ரொம்ப சரியா இருக்கு’ என்று சொன்னதற்குப் பிறகு மானிடர் கூட பார்க்கவில்லை. படம்தான் பார்த்தேன். அதே போல வெற்றிமாறனை நடிக்க வைக்க ஆசை இருக்கிறது.” என்றார்.
இதற்குப் பதிலளித்த வெற்றிமாறன், ‘என்னிடம் பல இயக்குநர்கள் நடிக்க கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் மறுப்பு தெரிவித்து இருக்கிறேன். நடிப்பு, இயக்கம் இரண்டும் வெவ்வேறு துறை. இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துப் பண்ணும் திறன் சிலருக்கு இருக்கலாம். என்னிடம் இல்லை. அதனால் நடிப்பில் ஆர்வமில்லை” என்றார்
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago