தேவா பாடிய தத்துவப் பாடல்

By செய்திப்பிரிவு

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகும் படம் 'வடக்கன்’. கூத்துப்பட்டறை மாணவரான குங்குமராஜ் நாயகனாகவும் வைரமாலா நாயகியாகவும் நடிக்கின்றனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இன்றைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வேடியப்பன் தயாரிக்கிறார்.

கர்னாடக, மேற்கத்திய இசையில் சாதனைகளைச் செய்துள்ள எஸ்.ஜே.ஜனனி இசையமைக்கிறார். பாடல்களை ரமேஷ் வைத்யா எழுதியுள்ளார். இதில் தத்துவப் பாடல் ஒன்றை இசை அமைப்பாளர் தேவா பாடியுள்ளார்.

இதுபற்றி இசை அமைப்பாளர் எஸ்.ஜே.ஜனனி கூறும்போது, "இந்தப் படத்தில் வரும் தத்துவப் பாடலை தேவா பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று அழைத்தேன். அவர் சிறப்பாகப் பாடி கொடுத்தார். பாடலுக்கான பின்னணி இசையை சிம்பொனி இசைக் குழு கொண்டு ஒலிப்பதிவு செய்ய, பல்கேரிய தலைநகர் சோஃபியாவுக்குச் செல்ல இருக்கிறேன்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE