“தண்ணீர் கேன் போட வந்தவன் சார்” - சதீஷின் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ ட்ரெய்லர் எப்படி? 

By செய்திப்பிரிவு

சதீஷ், ரெஜினா கஸாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் திரைப்படம், 'கான்ஜூரிங் கண்ணப்பன்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ, எல்லி அவ்ரம், ஜேஸன் ஷா உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்துக்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி ஹாரர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - தன் கனவில் தினமும் ஒரு பேய் பங்களாவில் சென்று மாட்டிக் கொள்வதாக நாசரிடம் ஹீரோ சதீஷ் புலம்புவதாக ட்ரெய்லர் தொடங்குகிறது. ஆரம்பத்தில் மிகவும் சீரியஸான ஹாரர் படம் போல தொடங்கும் ட்ரெய்லர் அதன்பிறகு சரண்யா, விடிவி கணேஷ், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லீ கோஷ்டியால் கலகலப்பான மோடுக்கு மாறுகிறது. ட்ரெய்லரில் காட்டப்படும் சில காமெடி காட்சிகள் நன்றாகவே கைகொடுத்துள்ளன. சுந்தர்.சி, லாரன்ஸ் குறித்த வசனங்கள், ட்ரெய்லரில் இறுதியில் ஆனந்த்ராஜ் பேசும் “நான் தண்ணீ கேன் போட வந்தவன் சார்” ஆகிய வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. 'கான்ஜூரிங் கண்ணப்பன்' ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

25 mins ago

சினிமா

56 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

மேலும்