‘குய்கோ’ என்றால் என்ன? - இயக்குநர் அருள் செழியன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: விதார்த், யோகிபாபு நடிக்கும் படத்துக்கு ‘குய்கோ’ என்று தலைப்புவைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீபிரியங்கா, துர்கா, இளவரசு, முத்துக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ்யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அந்தோணிதாசன் இசை அமைத்துள்ளார். ஏஎஸ்டி பிலிம்ஸ் எல்எல்பிதயாரித்துள்ளது. படத்தை இயக்கியுள்ள டி.அருள்செழியன் கூறியதாவது:

இது யதார்த்தமான சமூக நையாண்டி படம்.யோகிபாபு, வளைகுடா நாட்டில் ஒட்டகம் மேய்ப்பவர்.தனது தாய் இறந்துவிடுவதால் ஊருக்கு வருகிறார்.அதுவரை அவர் உடலை ‘பிரீஸர் பாக்ஸி’ல் வைத்திருக்கிறார்கள். அந்த பாக்ஸை கொண்டு வரும் விதார்த்துக்கும் அந்த ஊர்க்காரர்களுக்கும் பிரச்சினை ஒன்று ஏற்படுகிறது. ஊருக்கு யோகிபாபு வரும் வரை அவர் காத்திருக்கிறார். பிறகு என்னநடக்கிறது என்பது படம். கதை மலைக்கிராமம் ஒன்றில் நடக்கிறது. ‘ப்ரீஸர் பாக்ஸ்’ பின்னணியில்தான் கதை நகரும். இதன் பின்னணியில் உருவானமுதல் படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் ‘குடியிருந்த கோயில்’ என்று பெயர் வைக்க நினைத்தோம்.அதைச் சுருக்கி ‘குய்கோ’ என்று வைத்துள்ளோம்.

ஷாருக்கானின் ‘குச் குச் ஹோத்தா ஹே’ படத்தில் வரும் ‘தும் பாஸு ஆயே’ பாடலை தமிழில் யோகிபாபுவுக்கு வைத்திருக்கிறோம். இது ரசிக்கும் படி இருக்கும். படம் முடிந்துவிட்டது. தீபாவளிக்குப் பிறகு ரிலீஸ் செய்ய இருக்கிறோம். இவ்வாறு டி.அருள்செழியன் கூறினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்