சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதுடன் தேசிய விருதுகளையும் அள்ளியது. இந்நிலையில், இந்த காம்போ மீண்டும் இணைய உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இது அவரது 100-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இது தொடர்பான அறிவிப்பு வீடியோவில் படத்தின் டைட்டில் ‘புறநானூறு’ என எழுதப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மேல் உள்ள இரண்டு வார்த்தைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதால் படத்தின் டைட்டிலை படக்குழு முழுமையாக வெளியிடவில்லை. படத்தின் நடிகர்கள் தேர்வு ரசிகர்களை ஈர்த்துள்ளது. மேலும் துப்பாக்கி, புரட்சி, நெருப்பு, சிவப்பு துணி இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது படம் அடர்த்தியான கதைக்களத்தை உள்ளடக்கி உருவாக இருப்பதை உணரமுடிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago