மும்பை செல்கிறது ரஜினி 170 படக்குழு 

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரது 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை செல்கின்றனர். நாளை முதல் அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் அங்கு படமாக்கப்படுகின்றன. ரஜினி வரும் 25-ம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். 28ஆம் தேதி வரை அங்கு ஷூட்டிங் நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்