திரைப்படமாகிறது வாச்சாத்தி சம்பவம் 

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டை உலுக்கிய வாச்சாத்தி வன்முறை சம்பவம் சினிமாவாகிறது. இதை நடிகை ரோகிணி இயக்குகிறார். இதில் ‘ஜெய்பீம்’ லிஜோமோள் ஜோஸ் நடிக்க இருக்கிறார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா இதன் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

கடந்த 1992-ம் ஆண்டு, தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வனத்துறை, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அந்தக் கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, வனத்துறையை சோ்ந்த 4 அதிகாரிகள் உட்பட 155 வனத்துறையினா், 108 காவல் துறையினா், 6 வருவாய்த் துறையினா் என 269 போ் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 1996-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில், 12 பேருக்கு 10 வருடமும், 5 பேருக்கு 7 வருடமும் மற்றவர்களுக்கு ஒன்று முதல் மூன்று வருடச் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட நீதிமன்றம் 2011-ம் ஆண்டு தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து தண்டனை பெற்றவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.விசாரித்த நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. இந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE