இயக்குநர் ஹரியின் தந்தை மறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 88.

தமிழில் முன்னணி இயக்குநராக இருப்பவர் ஹரி. ‘சாமி’, ‘கோவில்’, ‘ஆறு’, ‘தாமிரபரணி’, ‘சிங்கம்’ உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஷாலின் 34வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று (அக்.21) காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று காலை கோபாலகிருஷ்ணனின் உயிர் பிரிந்தது. அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டு, பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்