‘என்னமோ நடக்குது’ படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மீண்டும் அதே குழுவினருடன் ‘சிகண்டி’ படத்திற்காக கைகோர்த்திருக்கிறார் விஜய் வசந்த்.
வளர்ந்து வரும் நாயகன் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல், தனது மகன் அகனை சாப்பிட வைத்து காலையில் பள்ளிக்கு அழைத்துச்சென்று விடுவது, அப்பா ‘வசந்த் அன் கோ’ வசந்தகுமார் தனது பொறுப்பில் விட்டிருக்கும் அலுவலக வேலைகளை பார்ப்பது என்று சராசரி மனிதராகவே இருக்கிறார், விஜய் வசந்த். ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்தோம்.
உங்கள் அடுத்த படத்துக்கு ‘சிகண்டி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரைப் பார்க்கும்போது இதிகாச பின்னணியில் உள்ள கதைபோல் தெரிகிறதே?
இது இதிகாசப் படமல்ல. இந்தப் படத்தின் கருவை இயக்குநர் ராஜபாண்டி சொல்லும்போது, “மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கும் பீஷ்மருக்கும் இடையே போர் நடக்கும். அப்போது கிருஷ்ணனின் ஆலோசனையோடும், சிகண்டியின் உதவியோடும் அர்ச்சுனன் போரில் வெற்றி பெறுவார். இந்த கருவை மட்டும் எடுத்துக்கொண்டு இப்போது உள்ள சமூக சூழலுக்கான பின்னணியில் ஒரு படத்தை கொடுக்கப்போகிறோம்” என்றார். அவர் கதையைச் சொன்னபோது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. கதைக்காக முகத்தில் அடர்ந்த தாடி வளர்க்கச் சொன்னார். அவர் கதை சொன்ன அடுத்த நாளிலிருந்தே நானும் தாடி வளர்க்கத் தொடங்கிவிட்டேன். படத்தில் ‘சிகண்டி’ கதாபாத்திரம் என்னுடையது. அர்ச்சுனன் பாத்திரத்துக்கு இன்னொரு நாயகனைத் தேர்வு செய்து வருகிறார்கள். செப்டம்பர் இறுதிக்குள் ஷூட்டிங் கிளம்பிடுவோம்.
‘சென்னை 28’, ‘நாடோடிகள்’ ஆகிய படங்களில் 4 நாயகர்களில் ஒருவராக நடித்ததையும், தற்போது சோலோ ஹீரோவாக நடிப்பதையும் எப்படி பார்க்கிறீர்கள்?
சந்தோஷமாக இருக்கிறது. ‘என்னமோ நடக்குது’ எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த படம். விஜய் சோலோ ஸ்டாராக நடித்திருக்கிறார் என்பதற்காக யாரும் தியேட்டருக்கு வரவில்லை. எதிர்பார்க்காமல் போய் படத்தை பார்த்து கதை, திரைக்கதை நன்றாக இருக்கிறது என்பதை அவர்கள் மற்றவர்களிடம் வெளிப்படுத்திய பிறகுதான் அந்தப் படம் இந்த இடத்துக்கு வந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு அதன் இயக்குநரும் ஒட்டுமொத்த டீமும்தான் காரணம். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு என் பயம் கூடியிருக்கிறது. நமக்கு ஒரு பொறுப்பு வரும்போது அதை சரியாக செய்தாகவேண்டும் என்கிற எண்ணம்தான் அதற்கு காரணம்.
வெங்கட்பிரபு, நீங்கள், யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி என்று உங்கள் நட்புக் கூட்டணி ஒன்றாக கூடும்போது அதிகமாக என்ன பேசுவீர்கள்?
யுவன் மூலம்தான் வெங்கட்பிரபு, பிரேம்ஜி இருவரோட நட்பும் எனக்கு கிடைத்தது. ரொம்ப காலமாகவே நான் அப்பப்போ யுவனின் ஸ்டூடியோவுக்கு போய்வருவேன். ஒரு முறை வெங்கட்பிரபு ‘சென்னை 28’ படத்தின் கதையை யுவனிடம் சொல்லவந்தார். அந்தப் படத்தில் நடிக்க 4 பேர் வேண்டும் என்று வெங்கட்பிரபு சொல்லிக்கொண்டிருந்தபோது யுவன்தான் ‘இங்கே ஒருத்தர் இருக்கார்’ என்று என் பக்கம் விரலைக் காட்டினார். ‘சென்னை 28’ ஷூட்டிங்கில் பிரேம்ஜி ரொம்பவே நெருக்கமான நண்பராகிவிட்டார். கல்லூரி முதல் ஆண்டு சேரும்போது ஒரு டீம் ஃபார்ம் ஆகுமே, அப்படித்தான் நாங்களும் சேர்ந்தோம். இன்று சினிமா, குடும்பம், வலி, வாழ்க்கை, உறவு இப்படி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம்.
யுவன் மூலம்தான் வெங்கட்பிரபு, பிரேம்ஜி இருவரோட நட்பும் எனக்கு கிடைத்தது. ரொம்ப காலமாகவே நான் அப்பப்போ யுவனின் ஸ்டூடியோவுக்கு போய்வருவேன். ஒரு முறை வெங்கட்பிரபு ‘சென்னை 28’ படத்தின் கதையை யுவனிடம் சொல்லவந்தார். அந்தப் படத்தில் நடிக்க 4 பேர் வேண்டும் என்று வெங்கட்பிரபு சொல்லிக்கொண்டிருந்தபோது யுவன்தான் ‘இங்கே ஒருத்தர் இருக்கார்’ என்று என் பக்கம் விரலைக் காட்டினார். ‘சென்னை 28’ ஷூட்டிங்கில் பிரேம்ஜி ரொம்பவே நெருக்கமான நண்பராகிவிட்டார். கல்லூரி முதல் ஆண்டு சேரும்போது ஒரு டீம் ஃபார்ம் ஆகுமே, அப்படித்தான் நாங்களும் சேர்ந்தோம். இன்று சினிமா, குடும்பம், வலி, வாழ்க்கை, உறவு இப்படி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம்.
ஆரம்பத்தில் உங்கள் அப்பா வசந்தகுமாருக்கு நீங்கள் நடிப்பதில் சம்மதம் இல்லையாமே. அப்படியா?
‘சென்னை 28’ படத்திற்கு 10 நாட்கள்தான் ஷூட்டிங் என்றும் இந்த ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்றும் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கிவிட்டு போனேன். கடைசியில் 40, 50 நாட்கள் ஆனது. படம் முடிந்ததும் ஆபீஸ் வேலைகளை கவனிக் கத் தொடங்கினேன். படம் ரிலீஸானபோது சமுத்திர கனி சார், ‘தம்பி, என்னோட அடுத்த படத்தில் நீயும் நடிக்கிற’ என்று அப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அதன்பிறகு, ‘சென்னை 28’ படத்தின் நூறாவது நாள் விழா நடந்தது. அதற்கு வந்த அப்பா, என் நடிப்புக்கு கிடைத்த பாராட்டைப் பார்த்துவிட்டு, ‘நல்ல கதையா தேர்வு செய்து நடிப்பா’ என்றார். பிசினஸ் கொஞ்சமும் பாதிக்காமல் நடிப்பையும் கவனித்து வருகிறேன். இப்போதுகூட ஆபீஸ் நேரத் தில் கதை கேட்டால் அப்பா உதைப்பார். அதற்காகவே லஞ்ச் பிரேக், டீ பிரேக் நேரத்தில் கதை கேட்டு வருகிறேன்.
எந்த மாதிரி கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறீர்கள்?
அப்படி ஏதும் வரைமுறை வைத்துக்கொள்ள விரும்பவில்லை. முதலில் நமக்கு கதை பிடிக்கணும். மனம் சொன்னால் போதும். நான் நடிப்பின் மீது கொஞ்சம்கூட ஈடுபாடு இல்லாமல் சினிமாவுக்குள் வந்தேன்.
என்னோட படத்தை பார்த்துட்டு ‘‘விஜய் நல்லா பண்ணியிருக்கான்’ என்று ரசிகர்கள் சொன்னால் போதும். அதற்கான சூழ்நிலையை நிச்சயம் உருவாக் குவேன்.
ஹீரோயினோடு டூயட் காட்சிகளில் நடிக்க உங்க மனைவிகிட்ட அனுமதி வாங்கிட்டீங்களா?
திருமணத்திற்கு முன்பே நான் சினிமாவில் நடிப்பேன்னு அவங்ககிட்ட சொல்லியிருக்கேன். அவங்க அதையெல்லாம் புரிஞ்சுக்குவாங்க. அதோட இதுவரைக்கும் படத்தில் நாயகியோடு நெருக்கமான காட்சிகள் எதுவும் வரலை. அப்படி வந்தால் அதையும் எதாவது ஒரு காரணம் சொல்லி சமாளித்துத்தானே ஆகணும்.
‘தெரியாம உன்னை காதலிச்சுட்டேன்’ படம் என்னாச்சு?
அதுவும் ‘என்னமோ நடக்குது’ பட வேலைகளோடு தொடங்கின படம்தான். எல்லா வேலைகளும் முடிஞ் சிடுச்சு. விரைவில் திரைக்கு வரும்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago