மெர்சல் தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஜிஎஸ்டி வசனங்கள் மியூட்

By ஸ்கிரீனன்

விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' தொலைக்காட்சி ஒளிபரப்பிலும், ஜிஎஸ்டி வசனங்கள் மியூட் செய்யப்பட்டன.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மெர்சல்'. இப்படம் வெளியானபோது, அதில் இடம்பெற்றிருந்த டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனங்கள் குறித்து பெரும் சர்ச்சை உருவானது.

இப்படத்தின் வசனங்களுக்கு பாஜவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதற்கு பல்வேறு கட்சியினர் 'மெர்சல்' படக்குழு ஆதரவு தெரிவித்தனர். தெலுங்குல் இதே படம் 'அதிரந்தி' என்ற பெயரில் வெளியானது. தணிக்கையில் பல்வேறு சிக்கல்களை கடந்து, ஜிஎஸ்டி வசனங்கள் மியூட் செய்யப்பட்ட பின்னரே வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'மெர்சல்' ஒளிபரப்பப்பட்டது. அதிலும், ஜிஎஸ்டி வசனங்கள் மியூட் செய்யப்பட்டன. மேலும், தொலைக்காட்சி ஒளிபரப்பில் முதன்முறையாக 'ஆளப்போறான் தமிழன்' பாடல் 2 முறை ஒளிபரப்பப்பட்டது. தொலைக்காட்சி திரையிடலில் இதுவரை எந்தவொரு பாடலுமே தொடர்ச்சியாக 2 முறை ஒளிபரப்பப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'மெர்சல்' பெரும் வரவேற்பைப் பெற்ற படம் என்பதால், பொங்கல் பண்டிகைக்கான டிஆர்பி ரேட்டிங்கில் 'ஜீ தமிழ்' தொலைக்காட்சி கணிசமாக முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்