‘லியோ’வின் முதல் 10 நிமிடங்களை தவறவிடாதீர்கள்: ரசிகர்களுக்கு லோகேஷ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: ’லியோ’ படத்தின் முதல் 10 நிமிடங்களை தவறவிட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

தற்போது இப்படத்துக்கான புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தின் முதல் 10 நிமிடங்களை ரசிகர்கள் தவறவிட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார். இது குறித்து அவர் பேசியதாவது:

“என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நான் சொல்வது, படத்தின் முதல் 10 நிமிடங்களை தவறவிட வேண்டாம். எப்படியாவது முன்னாலேயே போய் உட்கார்ந்து விடுங்கள். ஏனெனில் அந்த காட்சிக்காக பல்லாயிரக்கணக்கான பேர் உழைத்திருக்கிறோம். அந்த அனுபவத்துக்காகத்தான் போன அக்டோபரில் இருந்து இந்த அக்டோபர் வரை நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். ரசிகர்களுக்கு அது ஒரு ட்ரீட் ஆக இருக்கும்”. இவ்வாறு லோகேஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

5 mins ago

சினிமா

8 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்