அஜய் பாலகிருஷ்ணா, ஸ்வேதா ஷ்ரிம்ப்டன் ஜோடியாக நடிக்கும் படம், ‘இனி ஒரு காதல் செய்வோம்'. வர்கீஸ் மேத்யூ, மனு பார்த்திபன், கிஷோர் ராஜ்குமார், விக்னேஷ் சண்முகம், திடியன் உட்பட பலர் நடிக்கின்றனர். பாடல்களுக்கு ரேவாவும் பின்
னணி இசையை கெவின் டி கோஸ்டாவும் அமைத்துள்ளனர். கோபிநாத் சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.
நவ.3 ம் தேதி படம் வெளியாகிறது. எபிக் தியேட்டர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, "இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லை. வில்லன் கதாபாத்திரமும் இல்லை. சூழ்நிலைகள் எவ்வாறு மக்களை
நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் சித்திரிக்கின்றன, அதன் அடிப்படையில் ஒருவரைப் பற்றிய மற்றொருவரின் கருத்து எவ்வாறு மாறுகிறது என்பதை சுவாரஸியமான முறையில் இந்தப் படம் சொல்லும். நகைச்சுவை ததும்பும் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது" என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago