சென்னை: நைஜீரியாவைச் சேர்ந்த நடிகர் சாமுவேல் அபியோலா ராபின்சன் தமிழில் அறிமுகமாகிறார்.
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், ‘சூடானி ஃபிரம் நைஜீரியா’. ஜக்காரியா முகமது இயக்கிய இந்தப் படத்தில் சூடனைச் சேர்ந்த சாமுவேல் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து மலையாள ரசிகர்களிடம் அவர் பிரபலமானார்.
இவர் அடுத்து நடித்த ‘ஒரு கரீபியன் உடையிப்பு’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்போது திபாகர் தாஸ் ராய் இயக்கியுள்ள ‘டில்லி டார்க்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். பட விழாக்களில் பங்கேற்க இருக்கும் இந்தப் படம் தமிழ், மலையாள மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது.
இதற்கிடையே ஆர்ஜே.பாலாஜி, செல்வராகவன் நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் சாமுவேல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் நடிக்கும் தகவலை சமீபத்தில் அளித்த பேட்டியில் சாமுவேல் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago