இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ஃபர்ஹானா’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். அவரது இயக்கத்தில் அதர்வா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். க்ரைம் - ட்ராமா ஜானரில் உருவாக உள்ள இப்படத்துக்கு ‘டிஎன்ஏ’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தை ஒலிம்பியூ மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்கிறார். நடிகை நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், ஹெச்.வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதர்வாவை பொறுத்தவரை அவர் நடிப்பில் அண்மையில் ‘பட்டத்து இளவரசன்’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ‘மத்தகம்’ வெப் சீரிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. நிமிஷா சஜயன் நடிப்பில் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் ‘சித்தா’ படத்தில் அவரது கதாபாத்திரம் அழுத்தம் கூட்டியிருந்தது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago