சென்னை: ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்துக்கான டப்பிங் பணிகளை கமல்ஹாசன் தொடங்கியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் படம், ‘இந்தியன் 2’. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முக்கியமான காட்சிகள் தைவானின் தைபே, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளன.
அண்மையில் சென்னையில் அமைக்கப்பட்ட செட்டில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. இப்படத்துக்கான டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்படத்தில் கமல்ஹாசன் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இதற்கான வீடியோ ஒன்றை லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
A glimpse of dubbing session from INDIAN-2
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago