“மதுரை மக்களை மறக்க மாட்டேன்!” - நடிகர் சித்தார்த் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

மதுரை: சமுதாய மாற்றத்துக்கான படங்களை தொடர்ந்து எடுப்போம் என நடிகர் சித்தார்த் கூறினார்.

நடிகர் சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதையொட்டி மதுரைக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘சித்தா’ படத்தை ரசிகர்கள் வெற்றிப் படமாக்கி உள்ளனர். தமிழ்நாட்டில் 2 நாளில் அதிக வசூலை கொடுத்த படம். இதற்கு ரசிகர்கள்தான் காரணம். நீங்கள் கடந்து போகிற படமல்ல இது. திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். பெற்றோர் குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டும். இப்படம் பற்றி எல்லோரிடமும் சொல்லுங்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிரமப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம். என்னைவிட படத்தில் சிறப்பாக நடித்தவர் மதுரை சித்ரா.

நல்ல நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம். சமூக மாற்றத்துக்கான இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து எடுப்போம். மதுரை மக்களை மறக்க மாட்டேன். ஜிகர்தண்டாவையும் மறக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

17 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்