திரையரங்கு உரிமையாளர்கள் புறக்கணித்திருந்தால் விஜய் இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியுமா? - அபிராமி ராமநாதன் கேள்வி

By ஸ்கிரீனன்

திரையரங்கு உரிமையாளர்கள் புறக்கணித்திருந்தால் விஜய் இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியுமா? என்று திரையரங்குகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கேள்வி எழுப்பினார்.

ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி இயக்கியுள்ள இப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். நாயகனாக மொட்ட ராஜேந்திரன், முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 27) நடைபெற்றது. படக்குழுவினரோடு இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு, திரையரங்குகள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, கவிஞர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 'ஆறாம் திணை' இசையை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட அபிராமி ராமநாதன் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் பேசியதாவது:

பேய் இருக்கா இல்லையான்னு கேட்டா இருக்குன்னுதான் சொல்வேன். அமானுஷ்யம்னா அது பேயா, இல்ல முனியா ஏதோ ஒன்று இருக்கிறது. மனுஷனால் எதை பார்க்க முடியாதோ, அதை பார்க்கத்தான் ஆசைப்படுவான். இல்லையென்றால் நயன்தாரா படத்திற்கு ஏன் இவ்வளவு கூட்டம் வருகிறது.

பொன்ராஜ் பேசும்போது திரையரங்கு உரிமையாளர்கள் கொள்ளையடிக்கிறார்கள். அதனால் சின்ன படங்கள் சாகிறது என குற்றம் சாட்டினார். கடந்த வருடத்தில் நான் ஐம்பது படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். அதில் 45 படங்கள் சின்ன படங்கள் தான். இன்றைக்கு விஜய் பெரிய நாயகனாக இருந்தாலும் அவர் முதன்முதலாக நடித்தபோது அது சின்ன படம் தான். எங்களை போன்ற திரையரங்கு உரிமையாளர்கள் சின்ன படம் என அதை புறக்கணித்திருந்தால் அவர் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியுமா..?

திரையரங்குகளில் சில சின்ன படங்களுக்கு 15 பேர் கூட வர மாட்டிங்கிறார்கள். இதனால் எங்களுக்கு ஏசி போடுற காசு கூட கிடைப்பதில்லை. அப்படியென்றால் அப்படத்தை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை. சமீபத்தில் 'அருவி’ என்ற சின்ன படம் வெளியானது. ஆனால் முதல் நாளிலிருந்து நல்ல கூட்டம். அப்படத்துக்கு மட்டும் கூட்டம் எப்படி வந்தது. மக்களுக்கு மட்டும் எப்படியோ அது தெரியுது. அந்த வித்தை மட்டும் எங்களுக்கு தெரிந்திருந்தால் அத்தனை சின்ன படங்களையும் ஓட வைத்திருப்போம். அந்த வெற்றி சூத்திரத்தை கண்டுபிடியுங்கள்.

முதலில் திருட்டு விசிடி பிரச்சனை இருந்தது. இப்போது படம் வெளியாகி 15 நாட்களில் அமேசானில் படம் வந்துவிடுகிறது. இது முறையாக வருகிறது என்றாலும் குறைந்தது ஒரு மாதத்திற்காவது படங்களை அமேசானில் கொடுக்காமல் இருக்க வேண்டும். திரையரங்குகள் தான் வசூலை மொத்தமாக அள்ளிக் கொடுக்க முடியும். அமேசானில் அப்படி அள்ளிக் கொடுக்க முடியாது. திரையரங்குகள் பொன்முட்டையிடும் வாத்து. அதை நீங்கள் அழித்து விடாதீர்கள்

இவ்வாறு அபிராமி ராமநாதன் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

54 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்