‘ரஜினி 170’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: ரஜினியின் கதாபாத்திர லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் ரஜினியின் கதாபாத்திர லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திர லுக்கை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கோட், சூட், கூலிங் கிளாஸ் அணிந்தபடி ஸ்டைலிஷ் ஆன தோற்றத்தில் ரஜினி இடம்பெற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் ரஜினிகாந்த் கேரளா சென்றடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்