சென்னை: ‘லியோ’ படத்தை முடித்துவிட்ட நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் விஜய் 2 வேடத்தில் நடிக்க இருக்கிறார். அதில் ஒரு வேடத்தை மிகவும் இளமையாக காண்பிக்க உள்ளனர். இதற்காக படக்குழு அமெரிக்கா சென்றது. ‘3டி விஎஃப்எக்ஸ்’ என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யை இளமையாக காண்பிக்க இருக்கின்றனர்.
இதில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, பிரியங்கா மோகன் நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது பிரியங்கா மோகனுக்கு பதிலாக மீனாட்சி சவுத்ரி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர், விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நாயகியாக நடித்தவர். மேலும் இந்தப் படத்தில் மைக் மோகன், பிரசாந்த், லைலா, ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். இதன் தொடக்க விழா சென்னை பிரசாத் லேப்பில் நேற்று காலை நடந்தது. படப்பிடிப்பு சென்னையில் இன்று முதல் தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago