சுந்தர். சி - அனுராக் காஷ்யப் இணையும் ’ஒன் 2 ஒன்' ஃபர்ஸ்ட் லுக்

By செய்திப்பிரிவு

சென்னை: சுந்தர் சி மற்றும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இணைந்து நடிக்கும் ‘ஒன் 2 ஒன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

’தலைநகரம் 2’ படத்துக்குப் பிறகு சுந்தர். சி நடிக்கும் புதிய படத்தை கே.திருஞானம் எழுதி இயக்குகிறார். இவர் ‘த்ரிஷா’ நடிப்பில் வெளியான ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தை இயக்கியவர். இப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். ’இமைக்கா நொடிகள்’ படத்துக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக தமிழில் நடிக்கிறார் அனுராக்.

இப்படத்தில் விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திவேதி, மானஸ்வி, ரியாஸ் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். எஸ்கேஏ பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்