அக்டோபரில் தொடங்கும் அஜித், விஜய் படப்பிடிப்புகள்!

By செய்திப்பிரிவு

சென்னை: ‘விஜய் 68’ மற்றும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் விஜய் ‘வாரிசு’, அஜித் ‘துணிவு’ என இருவரும் ஒரே ரேஸில் இருந்து தத்தம் படங்களை வெளியிட்டன. அடுத்தடுத்த படங்களுக்கு நகரும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தை முடித்து அடுத்த படத்துக்கே தயாராகிவிட்டார். ‘லியோ’ அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆனால் அஜித்தை பொறுத்தவரை ‘துணிவு’ படத்துக்குப் பிறகு அவரது அடுத்த படத்துக்கான நகர்வு நிதானமாகவே இருக்கிறது. தனது பைக் டூர் பயணத்தை முடித்து வந்த அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்கு தயாராகியுள்ளார். இந்நிலையில், இருவரின் படங்களும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு துபாயில் அக்டோபர் 4-ம் தேதி தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு படங்களின் படப்பிடிப்புகளுமே ஒரே நேரத்தில் தொடங்க உள்ளதால், பட ரிலீஸும் ஒரே நேரத்தில் இருக்குமா என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

46 secs ago

சினிமா

26 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்