சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 23-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ மேஜராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு முன்னதாக ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
இப்படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 23வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் முருகதாஸை டேக் செய்து கூறியிருப்பதாவது: எனது 23வது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”. இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
28 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago