சென்னை: நவரச நாயகன் கார்த்திக், சன்னி லியோன், அத்திகா, சுகன்யா, சேது அபிதா, ராதாரவி, இளவரசு, ஜான் விஜய், சிங்கம் புலி, சுமன்.ஜெ உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘தீ - இவன்’. எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார் ஜெயமுருகன் டி.எம். இதை, மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கிறார். ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் ஜெயமுருகன் கூறும்போது, “ஆள்பவர்கள் மட்டுமல்ல, வாழ்பவர்களும் நல்லவர்களாக இருந்தால்தான், நல்ல சமூகம் படைக்க முடியும் என்பதைச் சொல்லும் படம் இது. சன்னி லியோன் ‘மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம்’ என்ற பாடலுக்கு ஆடியுள்ளார். நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் இந்தப் படம் பேசியிருக்கிறது. நடிகர் கார்த்திக்கும் சுகன்யாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகளில் பழைய கார்த்திக்கை ஞாபகப்படுத்தி இருக்கிறார். விரைவில் படம் வெளியாக இருக்கிறது” என்றார். இதன் பாடல்களை நடிகர் சிவகுமார், கே.பாக்யராஜ், கே.ராஜன் உட்பட பலர் வெளியிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago