'அஸ்மா' என்ற அரேபிய படத்தின் தழுவலே 'அருவி' என்ற செய்திக்கு இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் விளக்கமளித்திருக்கிறார்.
அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன், லெனின் பாரதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அருவி'. விமர்சகர்கள் மத்தியில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இயக்குநருக்கும், நாயகியான அதிதி பாலனுக்கும் திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அரேபியப் படமான 'அஸ்மா' படத்தின் அப்பட்டமான காப்பி என்று தகவல்கள் வெளியாகின. மேலும், விக்கிப்பீடியா இணையத்திலும் இதனைக் குறிப்பிட்டு இருந்தார்கள். இதனால் ஒருபுறம் பாராட்டு தெரிவித்து வரும் வேளையில், மறுபுறம் கடுமையான சாடலையும் எதிர்கொண்டது படக்குழு.
இந்நிலையில் 'அஸ்மா' படத்தின் தழுவலா 'அருவி' என்பதற்கு இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் கூறியிருப்பதாவது:
பல ட்வீட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு 'அஸ்மா' திரைப்படத்தை நான் பார்த்தேன். ஒரே மாதிரியான களனைக் கொண்டுள்ள இரண்டு படங்களை ஒப்பிட்டு விவாதிப்பது கண்டிப்பாக சினிமா ஆர்வலர்கள் செய்ய வேண்டியதே. ஆனால் இரண்டு படங்களையும் முழுதாகப் பார்த்துவிட்டு அவர்கள் பார்வையை வெளிப்படுத்த வேண்டும்.
'அஸ்மா' திரைப்படத்தைப் பார்க்க 'அருவி' ஒரு நல்ல வாய்ப்பு தந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 'அருவி' மற்றும் 'அஸ்மா' இரண்டையும் பார்த்தபின், இரண்டும் முற்றிலுமாக வெவ்வேறானது என்றும், ஒன்றுக்கொன்று வேறுபட்டது என்பதும் தெரியும். விக்கிப்பீடியாவில் கதையின் சாராம்சத்தை படிப்பதில் எந்தப் பயனும் இல்லை.
மணமான ஒரு பெண்ணைப் பற்றியும், குடும்பத்தில் அவள் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கின்ற கஷ்டங்கள் பற்றியும் 'அஸ்மா' பேசுகிறது. அருவியில், வெறும் முதல் 15 நிமிடங்கள் மட்டுமே அருவியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வளர்ப்பைப் பற்றி பேசுகிறது. பிறகு, மொத்தமாக சமூகத்தில் இருக்கும், மக்களுக்கு இருக்கும் பிரச்சினையைப் பற்றி அருவி பேச ஆரம்பிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago