ஹைதராபாத்: வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ படத்தை இயக்கியவர் வெங்கி அட்லூரி. இவர் இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கிறார். இப்படத்துக்கு ‘லக்கி பாஸ்கர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (செப்.24) ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
33 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago