சென்னை: சதீஷ், சுரேஷ் ரவி நடிக்கும் படம், ‘முஸ்தபா முஸ்தபா’. தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ளார். இதில், மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் பிரவீன் சரவணன் கூறும்போது, “ஒரு நண்பர்கள் குழு, சிக்கல் ஒன்றில் மாட்டிக்கொள்கிறது. அதில் இருந்து அவர்கள் ஒவ்வொருவரும் உதவி செய்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது கதை.
சீரியஸான கதைதான், அதை ஜாலியாக சொல்கிறோம். நட்பைக் குறிப்பதால் ‘முஸ்தபா முஸ்தபா’ என்று தலைப்பு வைத்துள்ளோம். ‘சூது கவ்வும்’ படம் போல இது டார்க் காமெடி படம். இதுவரை பார்த்த சதீஷுக்கும் இதில் பார்க்கும் சதீஷுக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் அவருக்கு காதல் காட்சிகளும் இருக்கிறது. சுரேஷ் ரவிக்கும் காதல் காட்சி உண்டு. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago