உடல் எடையைக் குறைத்த கீதாஞ்சலி செல்வராகவன்: பிரபலங்கள் பாராட்டு

By ஸ்கிரீனன்

கீதாஞ்சலி செல்வராகவனின் உடல் எடை குறைந்த புகைப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் எப்போதுமே பிரபலங்கள், தங்களுடைய உடல் எடை கூடிவிட்டால் பிரத்யேகமாக உடற்பயிற்சி செய்து எடையைக் குறைப்பார்கள். சமீபத்தில் இசையமைப்பாளர் இமான், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களுடைய உடல் எடையை மிகவும் குறைத்திருக்கிறார்கள்.

அந்தப் பட்டியலில் தற்போது செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவனும் இணைந்திருக்கிறார். 2 குழந்தைகள் பிறந்த பிறகு, அவருடைய உடல் எடை அதிகரித்தது.

'மாலை நேரத்து மயக்கம்' படத்தை இயக்கி முடித்துவிட்டு, உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்கினார் கீதாஞ்சலி. இதனால் எந்தவொரு பொதுநிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

தற்போது முழுமையாக உடல் எடையைக் குறைத்த புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதற்கு சமூக வலைதளத்தில் இருப்பவர்கள் அவருடைய உடல் எடை குறைப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்