‘சங்கமித்ரா’ முன் புதிய படம்: ஜெயம் ரவி முடிவு

By ஸ்கிரீனன்

'சங்கமித்ரா' படத்துக்கு முன்பாக, புதுமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெயம் ரவி.

சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் 'சங்கமித்ரா' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு அடுத்தாண்டு ஏப்ரலுக்கு தள்ளிவைத்திருக்கிறார்கள்.

ஆகையால் 'சங்கமித்ரா'வுக்கு முன்னதாக புதுமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் கூறிய கதை பிடித்துவிடவே ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழ் திரையுலகில் 'இமைக்கா நொடிகள்' படத்தைத் தொடர்ந்து அவர் ஒப்பந்தமாகியுள்ள படம் இதுவாகும்.

சத்ய சூரியன் ஒளிப்பதிவாளராகவும், சாம் இசையமைப்பாளராகவும் மற்றும் ரூபன் எடிட்டராகவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். கலை இயக்குநராக இளையராஜா பணிபுரியவுள்ளார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடித்து, இயக்குநர் அஹ்மத்தின் படத்தையும் முடித்துவிட்டுதான் 'சங்கமித்ரா'வில் கவனம் செலுத்தவுள்ளார் ஜெயம் ரவி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்