சென்னை: தங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் வகையில் ஒரு புதிய கதையை எழுதுமாறு விஜய், ஷாருக்கான் இருவரும் சொன்னதாக அட்லீ தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அட்லீ கூறியதாவது: என்னுடைய பிறந்தநாள் பார்ட்டியில் ஷாருக்கான் - விஜய் இருவரும் குழந்தைகளைப் போல பேசிக் கொண்டனர். இருவரும் என்னிடம் தங்களுக்காக ஒரு கதையை எழுதுமாறு கூறினர். என்னுடைய பிறந்தநாள் என்பதால் சும்மா ஒரு பேச்சுக்கு சொல்கின்றனர் என்று நினைத்தேன். ஆனால் மறுநாளும் விஜய் எனக்கு மெசேஜ் செய்து, ‘நீ அந்த கதையை எழுதினால் நிச்சயமாக நான் அதில் நடிக்கிறேன்’ என்று கூறினார். எனதருகில் இருந்த ஷாருக்கானும் அதை உறுதி செய்தார். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் அவ்வப்போது அந்த கதை குறித்து என்னிடம் கேட்டு வருகின்றனர். நிச்சயமாக ஒருநாள் அந்த கதையை எழுதி அவர்கள் இருவரையும் அதில் நடிக்க வைப்பேன்” இவ்வாறு அட்லீ கூறினார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப். 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கடந்த 12 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.883.68 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில் இப்படம் ரூ.1000 கோடி வசூலை தாண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
40 mins ago
சினிமா
51 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago