நடிகர் சூர்யா, இப்போது ‘கங்குவா’ படத்தில் நடித்துவருகிறார். சிவா இயக்கும் இந்தப் படத்தில் திஷா பதானி,இந்தி நடிகர் பாபி தியோல், நட்டி உட்பட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ‘சூரரைப் போற்று’ படத்தி்ன் சூப்பர் ஹிட்டுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைகின்றனர்.
இதில் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். நாயகியாக நடிக்க நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர் நடிப்பது உறுதியாகிவிடும் என்று தெரிகிறது.
இந்நிலையில் சூர்யாவுக்கு வில்லனாக இந்தி நடிகர் விஜய் வர்மா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் நடிகை தமன்னாவின் காதலர். இந்தியில் கல்லி பாய், பாஹி 3, டார்லிங்ஸ் உட்பட சிலபடங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கிலும் நடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
24 mins ago
சினிமா
33 mins ago
சினிமா
47 mins ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago