கமல் – மணிரத்னம் படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான்?

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் கமல்ஹாசன், பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி' படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதையடுத்து, ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியானது. அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்குகிறார். ‘நாயகன்’படத்துக்குப் பிறகு, அதாவது 37 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைகின்றனர். இதனால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. த்ரில்லர் கதையைக் கொண்ட இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

கமல்ஹாசனின் 234 வது படமான இதில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் ஜெயம் ரவி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் துல்கர் சல்மானும் இதில் இணைந்துள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்