தனது பயோபிக்கை தானே இயக்குகிறார் சோனா

By செய்திப்பிரிவு

சென்னை: ‘குசேலன்’ படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானவர் சோனா ஹைடன். குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு, ஜித்தன் 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சோனா, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவுடன் இணைந்து ஜெய் நடித்த ‘கனிமொழி’ என்ற படத்தைத் தயாரித்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள சோனா, இப்போது தனது வாழ்க்கைக் கதையை வெப் தொடராக உருவாக்குகிறார். அதை, தானே இயக்கி நடிக்கவும் இருக்கிறார்.

இதுபற்றி விசாரித்தபோது, “நடிகை சோனா தன் வாழ்க்கைக் கதையின் ஒரு பகுதியை மட்டும் வெப் தொடராக இயக்குகிறார். இதற்கு ’ஸ்மோக்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரபல ஓடிடி நிறுவனத்துக்காக இது உருவாகிறது. அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இதை முடித்துவிட்டு தனது வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக இயக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்” என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்