“நான் உங்கள் ரசிகை” - கங்கனா ரனாவத்துக்கு ஜோதிகா புகழாரம்

By செய்திப்பிரிவு

“நான் உங்கள் ரசிகை. சந்திரமுகி 2 படத்தில் உங்களின் நடிப்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கங்கனா ரனாவத்தை குறிப்பிட்டு நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தில் நடிப்பதை கண்டு மிகவும் பெருமையடைகிறேன். சந்திரமுகி கதாபாத்திரத்தில் நீங்கள் வசீகரமாகத் தோற்றமளிக்கிறீர்கள். நான் உங்கள் ரசிகை. இந்தத் திரைப்படத்தில் உங்களின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குநர் பி.வாசுவுக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இத்திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

55 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்