கோவை: தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதில், பி.லெனின் இயக்கிய ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ என்ற ஆவணப்படம் சிறந்த கல்வி திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டது. இதன் திரையிடல் நிகழ்வு, கோவையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பி.லெனின் கூறியதாவது:
நாட்டில் அதிக குறும்படங்கள் எடுக்கப்படுவது தமிழகத்தில்தான். தமிழக அரசு ஆவணப்படங்கள், குறும்படங்களுக்குத் தனியாக ஒரு வாரியம், தேர்வுக் குழு அமைத்து, சிறந்தவற்றைத் தேர்வு செய்து அவற்றுக்குப் பரிசுத் தொகை அளிக்க வேண்டும். நல்ல படைப்புகளைத் தயாரிக்க மானியத்தையும் அளிக்க வேண்டும். ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ ஆவணப்படத்தை கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரி சார்பில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்குத் திரையிடத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் மாணவர்கள் மத்தியில், ஆசிரியர்கள் குறித்த நல்ல எண்ணங்களை ஏற்படுத்தும். சில கெட்ட விஷயங்களை, திரைப்படங்களைப் பார்த்தும் மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர். சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கம் முன்பு, பாலர் அரங்கமாகச் செயல்பட்டுக் கொண்டு இருந்தது. தமிழக அரசு அதில் குழந்தைகளுக்கான நிகழ்வுகள், திரைப்படங்களைத் திரையிட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago