டைம் டிராவல் டெலிபோன்.. சில்க் ஸ்மிதா கேமியோ: ‘மார்க் ஆண்டனி’ ட்ரெய்லர் எப்படி? 

By செய்திப்பிரிவு

சென்னை: விஷால், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, ‘பகீரா’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ட்ரெயலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? ‘என்னாபா ரெடியா? ரெக்கார்ட் பண்ணிக்க’ என்று நடிகர் கார்த்தியின் குரலில் ட்ரெய்லர் தொடங்குகிறது. விஞ்ஞானியான செல்வராகவன் டைம் டிராவல் போன் ஒன்றை கண்டுபிடிப்பதாக ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. 80களில் மிகப்பெரிய கேங்ஸ்டர்களாக விஷால், எஸ்.ஜே.சூர்யா வருகின்றனர். தற்காலத்திலிருந்து கடந்தகாலத்துக்கு போன் செய்து பேசுவதால் வரும் சிக்கல்களே கதைக்களமாக இருக்கலாம் என்பதை ட்ரெய்லரின் முலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

ட்ரெய்லரில் ஒரு காட்சியில் சில்க் ஸ்மிதாவின் கேமியோ வருகிறது. சிஜி மூலம் அவரை மீண்டும் கொண்டு வந்திருக்கின்றனர். ட்ரெய்லரின் பின்னணியில் வரும் ‘அடியே மனம் நில்லுனா’ பாடல் மற்றும் ‘பஞ்சு மிட்டாய் சீலகட்டி’ பாடல்கள் ரகளை. படம் வரும் செப்., 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ‘மார்க் ஆண்டனி’ ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE