சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவித்து வரும் நிலையில், இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் நெல்சனுக்கு Porsche காரை பரிசளித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வெளிவந்த திரைப்படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பான் இந்தியா முறையில் வெளியாகி உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. இதுவரை இந்தப் படம் சுமார் 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பீஸ்ட்’ எதிர்மறை விமர்சனங்களுக்குப் பிறகு நெல்சன் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி மகிழ்ச்சியின் ஒருபகுதியாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நேற்று ரஜினிக்கு செக் கொடுத்தார். தொடர்ந்து இன்று காலை அவருக்கு BMW X7 காரை பரிசளித்தார். அடுத்து இயக்குநர் நெல்சனுக்கு செக் ஒன்றை கொடுத்தார். பின்பு தற்போது Porsche கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago