“எதிர்காலத்துக்கு வருக” - கவனம் ஈர்க்கும் வெங்கட் பிரபுவின் ‘விஜய் 68’ பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் நடிக்கும் 68வது படத்தில் பயன்படுத்தப்படவுள்ள நவீன தொழில்நுட்பத்துக்காக படக்குழு அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அது குறித்து வெங்கட் பிரபுவின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்.19-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஜய்யின் 68-வது படமான இதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அவர் 2 வேடங்களில் நடிக்கிறார். ஜெய், பிரபுதேவா, அபர்ணா தாஸ் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் ஒரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் ’விஜய் 68’ படத்துக்கான தொழில்நுட்பப் பணிகளை மேற்பார்வையிடுகின்றனர். அதிக செலவில் மேற்கொள்ளப்படும் இந்த தொழில்நுட்பத்தை இதற்கு முன் ஷாருக்கானின் ‘ஃபேன்’ படத்துக்காகவும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்துக்காகவும் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், ‘விஜய் 68’ படத்தின் பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் “எதிர்காலத்துக்கு வருக” என்று பதிவிட்டுள்ளார். இத்துடன் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவன அலுவலகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இவற்றை வைத்து ரசிகர்கள் பலரும் இது அறிவியல் புனைவு படமா அல்லது ஆக்‌ஷன் மசாலா படமா என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்