சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
‘மாவீரன்’ படத்துக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ‘எஸ்கே21’ என்று அழைக்கப்படும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 75 நாட்களாக ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வந்தது.
தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ‘மீண்டும் சந்திப்போம், காஷ்மீர்! எங்களை பாதுகாத்ததற்கு நன்றி. இந்த 75 நாட்கள் படப்பிடிப்பும் கனவு போல இருக்கிறது. படக்குழு அயராத உழைப்பும், காஷ்மீர் காவல்துறை, கமல்ஹாசன், எங்கள் ஹீரோ சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் ஆகியோரது ஆதரவும்தான் இதனை சாத்தியமாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago