சென்னை: நடிகை நயன்தாரா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். அதில் முதல்முறையாக தன்னுடைய குழந்தைகளின் முகம் தெரியும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்
தமிழில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மம்முட்டி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ள நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் செப்.7 அன்று திரைக்கு வருகிறது.
நயன்தாரா இதுவரை எந்த சமூக வலைதளத்திலும் கணக்கு தொடங்காமல் இருந்து வந்தார். அவரது பெயரில் பல்வேறு போலி கணக்குகள் இருந்து வந்த நிலையில், பல பேட்டிகளில் நயன்தாரா தான் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை என்று கூறி வந்தார். அவரது புகைப்படங்களை அவரது கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பகிர்ந்து வந்தார்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். அதில் முதல்முறையாக தன்னுடைய குழந்தைகளின் முகம் தெரியும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். கணக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவரை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
24 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago