“அன்பின் அடையாளம் ஷாருக்கான்” - ‘ஜவான்’ படவிழாவில் கமல்ஹாசன் புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 30 ஆண்டுகளாக ஷாருக்கான் அன்பின் அடையாளமாக திகழ்வதாக சென்னையில் நடைபெற்ற ‘ஜவான்’ இசை விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று (ஆக. 30) நடைபெற்றது. இதில் ஷாருக்கான், அட்லீ, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் காணொலி வாயிலாக தோன்றிய கமல்ஹாசன் ஷாருக்கான் மற்றும் படக்குழுவுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.

காணொலி மூலம் கமல்ஹாசன் பேசியதாவது: “இந்த விழாவில் கலந்துகொள்ள விரும்பினேன். ஆனால் முடியவில்லை. இப்படம் இந்திய சினிமாவின் திறமையாளர்களை ஒன்றிணைத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக ஷாருக்கான் அன்பின் அடையாளமாக திகழ்கிறார். கடினமான காலகட்டங்களிலும் கூட உங்கள் புன்னகை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஒளியாய் இருக்கிறது. இப்படமும் நீங்களும் வெற்றியடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எல்லாவற்றையும் கண்ணியத்துடன் நீங்கள் கையாளும் விதம் ஊக்கமளிக்கிறது”. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

37 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்