பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு திடீரென வருகை தந்தார். மேலும் அங்கிருந்த பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள், ஊழியர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் உலக அளவில் ரூ.530 கோடியைத் தாண்டி வசூலித்து வருகிறது. பட ரிலீஸூக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றிருந்தார்.
தொடர்ந்து உத்தரபிரதேசம் சென்றிருந்த அவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து காலில் விழுந்த புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில் தற்போது பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென வருகை தந்துள்ளார். அப்போது அங்கிருந்த பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள், பணிமனை ஊழியர்களுடன் கலந்துரையாடி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ரஜினி திரையுலகில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு இந்த பணிமனையில் தான் நடத்துனராக பணியாற்றினார். அடுத்து ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பில் விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago