'நித்தம் ஒரு வானம்' படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், 'விருபாக்ஷா' படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனம் சார்பில் பி.வி.எஸ். என். பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு 'ஸ்டார்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பி.ரூபக் பிரணவ் தேஜ் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றும் இந்தத் படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கிய இளன் இயக்குகிறார். கதையின் நாயகனாக கவின் நடிக்கிறார். 2 கதாநாயகிகள் இதில் நடிக்க இருக்கின்றனர். மலையாள நடிகர் ஒருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது. தற்போது 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகவும், விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
யுவன் சங்கர் ராஜா பிறந்த நாளான ஆக. 31-ம் தேதி ‘ஸ்டார்’ படத்திலிருந்து பிரத்யேக காணொலி வெளியிடப்படவிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago