பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் கிராபிக்ஸுக்கு மட்டும் ரூ.200 கோடி?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.200 கோடியை படக்குழு செலவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் சயின்ஸ் பிக்‌ஷன் படம், ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் முதல்தோற்றம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் முக்கிய அங்கமாக இருப்பதால் கிராபிக்ஸுக்கு காட்சிகளுக்கு மட்டும் ரூ.200 கோடியை படக்குழு செலவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத தரத்துடன் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்க வேண்டும் என்பதில் படக்குழு தீர்மானமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் அதன் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. டீசர் கடும் ட்ரோல்களை எதிர்கொண்டதால் மேலும் ரூ.100 கோடி செலவு செய்து படத்தின் கிராபிக்ஸ் தரத்தை மேம்படுத்த படக்குழு முயன்றது. ஆனால் அது பெரியதிரையில் எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு ஆரம்பத்திலேயே அதிக தொகையை செலவழித்து தரமான கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்