நடிகர் சங்கப் பொதுக்குழு செப்.10-ல் கூடுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் சங்கத்தின் 67-வது பொதுக்குழு கூட்டம் செப்.10-ம் தேதி நடக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஒவ்வொரு வருடமும் கூட்டப்படுவது வழக்கம். 2022-23-ம்ஆண்டுக்கான கூட்டம் செப்.10-ம் தேதி காலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடக்கிறது.

நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துகிறார். துணைத் தலைவர் கருணாஸ் 2022-2023-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு,செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெற இருக்கிறார். பொருளாளர் கார்த்தி, கட்டிட நிதி மற்றும் எதிர்கால பொருளாதார திட்டமிடல் பற்றி விளக்குகிறார். கடந்த கால நிர்வாகச் செயல்பாடுகள், புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டுதல், எதிர்கால திட்டங்களை விளக்கி விஷால் ஒப்புதல் பெற உள்ளார். இறுதியில் துணைத் தலைவர் பூச்சி முருகன் நன்றி தெரிவிக்கிறார்.

இதற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்